Home Top Ad

How to buy Term Insurance - Term Insurance வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

How to buy Term Insurance - Term Insurance வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

Term Insurance என்றால் என்ன?

  Term Insurance என்பது, ஒரு குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவர் அல்லது வருமானம் ஈட்டக்கூடிய நபர் தவறுதலாக இருந்துவிட்டால் அவரது குடும்பம் அல்லது அவரை சார்ந்தவர்கள் எந்தவித பண நெருக்கடி இல்லாமல் இருக்க கொடுக்கபட்ட ஒரு திட்டம் ஆகும். இதில் வருமானம் ஈட்டும் அந்த நபர் எடுக்கும் Policy-க்கு ஏற்ப அவரது குடும்பத்திற்கு பணம் வழங்கப்படும். ஆனால் அவர் term insurance policy எடுப்பதற்குமுன், அந்த insurance company-யால் சில சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார். அதை பற்றி பாப்போம்.


Term Insurance கிடைப்பதற்கான தகுதிகள் 

Term Insurance எடுக்கும்போது நாம் கேட்கும் தொகையை insurance ஆக தரமாட்டார்கள். உங்களின் தகுதிக்கு ஏற்ப 50 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகையை கூட தரலாம்.
term insurance உங்களுக்கு கொடுத்தற்கு முன்,

  * நபரின் வருமானம்

  * வயது

  * உடல்நிலை

  * உங்கள் வேலையின் நிலை மற்றும் ஆபத்துகள்

 போன்ற பல சோதனைகளை செய்வார்கள். பெரும்பாலான சமயங்களில் 20 லிருந்து 25 வயதிற்குள் term இன்சூரன்ஸ் எடுப்பவர்களுக்கு எந்தவித உடல்நிலை சோதனைகளும் தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு Blood test, cholesterol test, உங்கள் ஏதேனும் நோய் உள்ளதா போன்ற பல சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

கவனிக்க வேண்டியவை

  Term insurance-ஐ பொறுத்தவரை policy எடுக்கும் நபர், policy முடியும்வரை உயிரோடு இருந்தால் அவர்களுக்கு எந்தவித தொகையும் திருப்பி தரப்படமாட்டாது. அதாவது இந்த Policy உங்களின் வாழ்க்கைக்கான தொகையே தவிர சேமிப்பு தொகை இல்லை. அதனால் policy எடுக்கும்போது கவனமாக செயல்படுங்கள்.